பூண்டு சாப்பிட விரும்பாதவர்கள் கூட அதன் மருத்துவ குணம் தெரிந்து அதை சாப்பிட நினைப்பார்கள். ஆனால் அதன் நெடி தன்மையால் சாப்பிட் அதயக்கம் இருக்கும். அப்படிப்பட்ட பூண்டு வைத்து சுவையான தொக்கு செய்து சாப்பிடலாம். சுடு சாதம், தோசை என எல்லா வகையான உணவிற்கும் ஒரு சாஇடு டிஸாக பயன்படுத்தலாம்.
வாய்வுத்தொல்லையை போக்கும் பூண்டு தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பூண்டு
மிளகாய்த்தூள்
கொத்தமல்லித்தூள்
கடுகு
வெந்தயம்
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
உப்பு
நல்லெண்ணெய்
செய்முறை
முதலில் பூண்டை தோலுரித்து எடுத்து கொள்ளவும்.'புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் கடுகு, வெந்தையம் இரண்டையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பின்னர் எண்ணெயை காயவைத்து அதில் கடுகயையும் வெந்தையத்தையும் சேர்த்து மற்றும் பெருங்காய பொடி, பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூள், ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு பச்சை வாசனை நீங்கியவுன் இறக்கி விடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“