இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான தக்காளி தொக்கு எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த தக்காளி தொக்கு இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். இதை சுடு சாதத்திற்கு கூட சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
Advertisment
காலை உணவுக்கு இட்லி, தோசைக்கு எப்போதும்போல் தேங்காய் சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டு ஃபோர் அடித்து விட்டது என்று கூறுபவர்கள் இனி கவலை இல்லாமல் இந்த ரெசிபியை செய்து கொடுங்கள். இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள். இந்த தொக்கு நன்கு மசித்தும் சாப்பிடலாம் இல்லையென்றால் முழுதாக மசியாமலும் இருக்கலாம். உங்களுக்கு ஏற்ற மாதிரி செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி பூண்டு காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் மிளகாய்த்தூள் தனியாதூள் மஞ்சள் பொடி கடுகு கறிவேப்பிலை எண்ணெய் கல் உப்பு
Advertisment
Advertisements
செய்முறை:
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து, கடுகு பொரியும் வரை காத்திருக்கவும். கடுகு பொரிந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பூண்டு நல்ல மணம் வரும் வரை வதக்குவது தொக்கிற்கு தனி சுவையைக் கொடுக்கும்.
அடுத்து, கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை கிளறி விடவும். இப்போது, பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி மற்றும் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு குழைந்து, அதிலிருந்து நீர் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
மசாலா வாசனை போகும் வரை சுமார் 20-25 நிமிடங்கள் தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே நன்கு வதக்க வேண்டும். தக்காளி முழுதாக மசியாமல், ஒன்றிரண்டாகத் தெரியும் பதத்தில் இருப்பது அவசியம். இது தொக்கிற்கு ஒரு நல்ல கெட்டித்தன்மையைக் கொடுக்கும். அவ்வளவுதான், இந்த சுவையான தக்காளி தொக்கு இட்லி மற்றும் தோசைக்கு ஒரு அருமையான காம்பினேஷனாக இருக்கும்.