scorecardresearch

காலையில் வெறும் வயிற்றில் நெய்… உங்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தா தொடாதீங்க!

சில நோயால் அவதிப்படுபவர்கள் நெய் சாப்பிடவே கூடாது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆயுர்வேதத்தை பொருத்தவரை ஒரு மனிதனின் மருந்து மற்ற மனிதனுக்கு அதுவே விஷமாக மாறலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் நமது உடலுக்கு பொருந்தும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் நெய்… உங்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தா தொடாதீங்க!

நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் நெய்யில் பல நன்மைகள் இருக்கிறது. நல்ல கொழுப்பை உடலுக்கு சேர்க்கிறது நெய். மேலும் வயதாவதை தடுப்பதோடு, உடலுக்கு பொலிவை தருகிறது. மேலும் நெய்யில் பல நன்மைகள் இருகின்றன. இதில் பல்வேறு சத்துக்கள் மறைந்திருக்கிறது. ஆனால் சில நோயால் அவதிப்படுபவர்கள் நெய் சாப்பிடவே கூடாது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆயுர்வேதத்தை பொருத்தவரை ஒரு மனிதனின் மருந்து மற்ற மனிதனுக்கு அதுவே விஷமாக மாறலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் நமது உடலுக்கு பொருந்தும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

யார் நெய்யை தவிர்க்க வேண்டும்?

அஜுரணம் தொடர்பான பிரச்சனைகள், ஐபிஎப்-டி என்று கூறப்படும் இரிட்டபல் பவுல் சிண்ரோம் என்று கூறப்படும் வயிற்று பிரச்சனை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நெய்யை தவிர்க்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் காய்ச்சல் வரும் நேரங்களில் நெய் சாப்பிடக்கூடாது.

நீங்கள் ஏற்கனவே உடல் பருமனாக இருந்தால், கர்ப்பமான நேரத்தில் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 கல்லீரல் சுருக்கம், ஹெபடைட்டிஸ், மண்ணீரல் வீக்கம், கல்லீரல் வீக்கம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Ghee in empty stomach is good but these people should avoid ghee