மணக்க மணக்க பாய் வீட்டு நெய் சோறு... குக்கரில் இப்படி செஞ்சு அசத்துங்க!

பாய் வீட்டு ஸ்டைலில் நெய் சோறு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பாய் வீட்டு ஸ்டைலில் நெய் சோறு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
ghee rice

பாய் வீட்டு ஸ்டைலில் நெய் சோறு

தேவையான பொருட்கள்

Advertisment

பாஸ்மதி அரிசி 
இஞ்சி-பூண்டு விழுது 
நெய் 
வெங்காயம்  
பச்சை மிளகாய் 
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு
எண்ணெய்

செய்முறை

ஒரு குக்கரை எடுத்து அதில் நெய் ஊற்றவும், தொடர்ந்து அதில் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.  முந்திரி பருப்பையும் சேர்த்துக்கொள்ளவும். 

Advertisment
Advertisements

தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பச்சை மிளகாய் சேர்க்கவும். தொடர்ந்து இதை நன்றாக வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கவும். அரிசிக்கு ஏற்ப தண்ணீரை ஊற்றி  உப்பை சேர்த்துகொள்ளவும். நன்றாக ஒரு முறை கொதித்ததும். அரிசி மற்றும் நெய் சேர்க்கவும். 

பின்னர் குக்கரை மூட வேண்டும். ஒரு விசில் வந்ததும், தீயை குறைக்கவும். 4 நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு குக்கரை அணைக்கவும். பின்னர் திறந்து பார்த்தால் மணக்க மணக்க  சூப்பரான நெய்ச் சோறு ரெடியாகி விடும். 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ghee Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: