இஸ்லாமியர்கள் வீடுகளில் செய்வதுபோலவே இந்த நெய் சோறு இருக்கும். ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி : அரை கிலோ
இஞ்சி-பூண்டு விழுது: அரை ஸ்பூன்
நெய்: 75 எம்.எல்
வெங்காயம் : 2
பச்சை மிளகாய் : 4
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு
எண்ணெய்
செய்முறை
குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் நெய் ஊற்றவும், தொடர்ந்து அதில் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். முந்திரி பருப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும். பச்சை மிளகாய் சேர்க்கவும். தொடர்ந்து இதை நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்ப்போம். அரிசிக்கு ஏற்ப தண்ணீரை ஊற்றவும். உப்பை சேர்த்துகொள்ளவும். நன்றாக ஒரு முறை கொதித்ததும். அரிசியை சேர்த்துகொள்ளுங்கள். நெய்யை சேர்த்துகொள்ளுங்கள். குக்கரை மூட வேண்டும். ஒரு விசில் வந்ததும், தீயை குறைக்கவும். 4 நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு குக்கரை அணைக்கவும். சூப்பரான நெய்ச் சோறு ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil