மழை காலம் தொடங்கியிருக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெற்றோர் வரை அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் வரக்க்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால் வீட்டிலேயே கைவைத்தியம் சொய்வதுபோல, சில விஷயங்களை நாம் செய்யலாம். இதில் ஒன்றுதான் இஞ்சி மிட்டாய். இது வீட்டிலே செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி, எலுமிச்சை சாறு, எலக்காய், மிளகு, உப்பு, தேன், சாட் மசாலா.
செய்முறை :
‘இஞ்சியை துண்டுகளாக வெட்டிகொள்ளவும். இதில் எலுமிச்சை சாறை பிழியவும். மேலும் இதில் எலக்காய், மிளகு, உப்பு, சாட் மசாலா, தேன் ஆகியவற்றை கலந்து எடுத்துகொள்ளவும்.
இதுபோலவே இஞ்சியை வெட்டி அதை வறுத்து, அதன் தோலை நீக்கி பின்பு அதை துண்டுகளாக வெட்டி,அதில் தேன், மிளகு, உப்பு, கலந்து சாப்பிடலாம். இதை 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.