ஒவ்வொரு சமையலுக்கும் இஞ்சி - பூண்டு பேஸ்ட் கடையில் வாங்கி பயன்படுத்துவதால் உங்கள் சமையலின் சுவை மாறக்கூடும். எனவே இனி வீட்டிலேயே இஞ்சி - பூண்டு பேஸ்ட் செய்து அதை சமையலுக்கு பயன்படுத்தி பாருங்கள். உணவின் சுவை தாளிக்கும்போதே தெரிந்துவிடும், அந்த அளவிற்கு மணமான இஞ்சி - பூண்டு பேஸ்ட் செய்வது பற்றி பார்ப்போம்.
இதற்கு தேவையான பொருட்கள் - இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய். இவை அனைத்தையும் தேவையான அளவு பயன்படுத்தினால் போதுமானது.
தேவையான அளவு இஞ்சியை எடுத்து மேல் உள்ள தோலை சீவி நன்கு கழுவி நறுக்கி ஒரு பாத்திரத்தில் அளந்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் தோல் உறித்த வெள்ளை பூண்டினையும் அதே பாத்திரத்தில் அளந்து எடுக்கவும். இஞ்சியை விட பூண்டு ஒரு 20 பல் அதிகமாக இருக்க வேண்டும்
மேலும் அதில் தேவையான அளவு பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும். முதலில் இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் நன்றாக கலந்து விடவும். ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக மைய அரைக்க வேண்டும்.
பின்னர் அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்டை ஒரு கடாயில் மீடியம் பிளேமில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் ஒரு ஐந்து நிமிடம் கிளற வேண்டும். தண்ணீர் நன்கு வற்றியவுடன் அதனை ஆற வைத்து காற்று புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து ஃப்ரிட்ஜியில் வைத்து கொள்ளலாம்.
இந்த முறையில் செய்தால் 3 முதல் 5 மாதம் வரை இஞ்சி பூண்டு பேஸ்ட் அப்படியே இருக்கும். குறிப்பாக தண்ணீர் சிறிதளவும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் அது கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது.
எனவே தண்ணீர் வற்றும்வரை கிளறி எடுத்து சேமித்து வைத்தால் மூன்று மாதங்கள் வரை தாராளமாக பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“