இஞ்சி, பூண்டு பொடி எல்லாம் அவ்வப்போது கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறீர்களா? ஆனால் இனி கவலை வேண்டாம் வீட்டிலேயே இஞ்சி, பூண்டு பொடி ஈஸியாக செய்யலாம்.
ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாத இஞ்சி பூண்டு பொடி செய்வது பற்றி ஹசீஸ் ரெசிபிஸ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
முதலில் பூண்டு பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம். பூண்டு தோல் உரித்து எடுத்து கொள்ளவும். பின்னர் தண்ணீர் விட்டு நான்கு ஐந்து முறை நன்கு கழுவவும்.
தண்ணீர் சிறிதும் இல்லாமல் நிழலில் காயவைத்து எடுத்து மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதை தற்போது ஒரு நான்கைந்து நாட்கள் நன்றாக காயவைத்து ஈரப்பதம் இல்லாமல் எடுத்து கொள்ளவும்.
அடுத்ததாக இதனை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு பவுடர் மாதிரி அரைத்து எடுத்தால் அவ்வளவுதான் பூண்டு பொடி ரெடியாகிவிடும்.
இஞ்சி/பூண்டு/வெங்காயம்/தக்காளி பொடி வீட்டிலேயே செய்யலாம்/Homemade ginger/garlic/onion &tomato powder
இப்போது இஞ்சி பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான அளவு இஞ்சி எடுத்து தோல் நீக்கி கழுவிவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை எடுத்து ஒரு நான்கு முதல் ஐந்து நாட்கள் ஈரத்தன்மை போகும்வரை வெயிலில் காயவைத்து எடுத்து மிக்ஸி ஜாரில் மைய அரைத்து எடுக்கவும். கொரகொரப்பாக இல்லாமல் பவுடர் மாதிரி நன்கு மைய அரைத்து இருக்க வேண்டும்.
பின்னர் இதனை எடுத்து ஒரு பவுலில் வைத்துக் கொள்ளலாம். பூச்சி விழாமல் காற்று புகாத பவுலில் வைக்க வேண்டும். எப்போதும் போல சமையலுக்கு இதை பயன்படுத்தலாம். சுவையாக இருக்கும். அடிக்கடி செய்ய வேண்டியது இல்லை, ஒரு வருடத்திற்கு ஒருமுறை செய்தாலே போதும் பூச்சி விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.