இஞ்சி துவையல் ரெசிபி செய்வது பற்றி பார்க்கலாம்.
இஞ்சி – அரை கப்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் – 5
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன்
தேங்காய் துருவல்- 4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சியை போட்டு நன்கு வதக்கவும். அதே கடாயில் மீண்டும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் போட்டு வதக்கவும்.
இதன் பின் தேங்காய் துருவல், உப்பு, புளி சேர்த்து அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். சிறிது வெல்லம் சேர்த்து அரைத்தால் இஞ்சி துவையல் ரெடி. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“