எந்த மாவும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் எப்படி சப்பாத்தி செய்வது என சமையற் கலைஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார். அதற்கான ரெசிபியை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கோதுமை, மைதா மாவுகள் இல்லாமல் குளூட்டன் ஃப்ரீ சப்பாத்தியை எப்படி செய்வது என்று சமையற் கலைஞர் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். அதை எப்படி செய்வது எனக் காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
ஒரு கப் அவல், ஒரு உருளைக் கிழங்கு, மூன்று பச்சை மிளகாய்கள், ஒரு சிறிய துண்டு இஞ்சி அரை டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி பொடி, அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலைகள்
செய்முறை:
Advertisment
Advertisement
முதலில், அவலை மிக்ஸியில் அரைத்து பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதேபோல், உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய்கள் மற்றும் இஞ்சி ஆகியவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் பசை பதத்திற்கு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இஞ்சி, உருளைக் கிழங்கு சேர்த்து அரைத்து வைத்திருந்த பேஸ்டை, பொடியாக்கி வைத்திருந்த அவலுடன் சிறிது சிறிதாக சேர்த்து பிசைய வேண்டும். இதை பிசையும் போது கஸ்தூரி மேத்தி பொடி, சீரகம், ஓமம், மஞ்சள் தூள், கறிவேப்பிலைகள் மற்றும் உப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இவை அனைத்தையும் சேர்த்து பிசைந்த பின்னர், அதனை 5 நிமிடங்களுக்கு அப்படியே ஊற வைக்க வேண்டும். இதையடுத்து, சப்பாத்தி வடிவத்திற்கு இதனை வட்டமாக தேய்த்து எடுத்துக் கொள்ளலாம். இதன் பின்னர், வழக்கமான சப்பாத்தியை போன்று இதனை அடுப்பில் சுட்டு எடுக்கலாம். இதன் மூலம் ஆரோக்கியமான குளூட்டன் ஃப்ரீ சப்பாத்தி தயாராகி விடும்.