கோவா ஃபேமஸ் சன்னா தால் பர்ஃபி செய்வது பற்றி பார்ப்போம்.
தேங்காய் துருவல் – 1 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்
செய்முறை
முதலில் கடலைப் பருப்பை சுத்தம் செய்து, வேகவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை அடிகனமான பாத்திரத்தில் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு செய்யவும்.
தேங்காய் துருவல், கடலைப்பருப்பு விழுது, ஏலக்காய் தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து கிளறவும். நெய் விட்டு அடிப்பிடிக்காமல் கிளறி, கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி வைக்கவும். அதன் பின் மிதமான சூடு இருக்கும்போது அதை பிடித்த வடிவத்தில் நறுக்கி வைக்கவும். அவ்வளவு தான் கோவா ஃபேமஸ் சன்னா தால் பர்ஃபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“