அசைவம் உண்பவர்கள் ஆட்டு மண்ணீரல் எனப்படும் சுவரொட்டியை சாப்பிடலாம். இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது என்று டாக்டர் மைதில் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள், ரத்த ஓட்டம் சரியாக இல்லாதவர்கள் வெள்ளாட்டு சுவரொட்டி சாப்பிடுவது நல்லது. உடலில் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க ஆட்டு மண்ணீரல் மிகவும் உதவுகிறது. ஏனெனில் இதில் அதிக அளவு புரதம் நிறைந்திருக்கிறது. அவை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கவும், ரத்த சோகை வராமல் தடுக்கவும் உதவுகிறது.
இவற்றை சாப்பிட்டால் கிடைக்கும் மிகவும் முக்கியமான நன்மைகளில் ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஆட்டு சுவரொட்டி சாப்பிடுவது நல்லது. அவை உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவும்.
சுவரொட்டியில் புரத ஊட்டச்சத்தும் அதிகமாக உள்ளது. இது உடல் எடையை குறைக்கவும், தசை வளர்ச்சிக்கும் உதவும். இதில் துத்தநாகம் சத்தும் உள்ளதால் எலும்பு உறுதியை மேம்படுத்தும்.
Advertisment
Advertisements
வைட்டமின் பி12 சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். எலும்புகளை உறுதியாக்கும். முடக்குவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.
இதில் செலினியம் சத்து உள்ளது. இது தைராய்டு வராமல் இருக்கும். உடலில் ஹார்மோனை சீராக வைக்கும். வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இரும்புச்சத்து தன்மையும் மேம்படுத்தும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை சீரமைக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும். சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். வளரும் குழந்தைகளுக்கு இதனை அடிக்கடி கொடுக்கலாம். எலும்புகளை ஆரோக்கியமாக்கும். பாஸ்பரஸ், செலினியம் சத்துக்களும் இதில் உள்ளது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆட்டு சுவரொட்டி பெரிதும் உதவும். எனவே இதனை நீங்கள் மாதம் இருமுறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக தொற்றிலிருந்து முழுமையாக குணமடையலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.