தேங்காய் சட்னி, இப்படி செய்தால் கெட்டுப்போகாது.
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 4,
உளுந்தம்பருப்பு – 2 டீ ஸ்பூன்,
கடலைப் பருப்பு – 3 டீ ஸ்பூன்,
புளி,
கறிவேப்பிலை,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை வறுக்க வேண்டும். பின்னர், இவற்றோடு தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்க வேண்டும்.இந்தக் கலவை நன்றாக ஆறிய பிறகு உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சுவையான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி ரெடியாக இருக்கும்.இந்த ஸ்டைலில் அரைத்த தேங்காய் சட்னி டேஸ்டியாகவும், கூடுதல் நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும். நீங்களும் இது போன்று முயற்சி செய்து பாருங்கள்.