பாட்டி காலத்து ருசியான மீன் குழம்பு... வெறும் 8 நிமிசம் போதும்: செஃப் தாமு ரெசிபி
ருசியான பாட்டி காலத்து மீன் குழம்பு எப்படி 8 நிமிடத்தில் செய்து அசத்தலாம் என்று பிரபல சமையல் கலை வல்லுநரான செஃப் தாமு வழங்கி இருக்கிறார். இந்த பாட்டி காலத்து மீன் குழம்பு ரெசிபியை செஃப் தாமு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
ருசியான பாட்டி காலத்து மீன் குழம்பு எப்படி 8 நிமிடத்தில் செய்து அசத்தலாம் என்று பிரபல சமையல் கலை வல்லுநரான செஃப் தாமு வழங்கி இருக்கிறார். இந்த பாட்டி காலத்து மீன் குழம்பு ரெசிபியை செஃப் தாமு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
ருசியான பாட்டி காலத்து மீன் குழம்பு எப்படி 8 நிமிடத்தில் செய்து அசத்தலாம் என்று பிரபல சமையல் கலை வல்லுநரான செஃப் தாமு வழங்கி இருக்கிறார்.
மீன் குழம்பு என்றாலே பலருக்கும் நா ஊறும். அதுவும் நமது பாட்டி கைவண்ணத்தில் தயார் செய்தது என்றால், சாதம் கணக்கு இல்லாமல் சாப்பிடுவோம். அப்படி ருசியான பாட்டி காலத்து மீன் குழம்பு எப்படி 8 நிமிடத்தில் செய்து அசத்தலாம் என்று பிரபல சமையல் கலை வல்லுநரான செஃப் தாமு வழங்கி இருக்கிறார்.
Advertisment
இந்த பாட்டி காலத்து மீன் குழம்பு ரெசிபியை செஃப் தாமு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதனை இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ புளி - எலுமிச்சை காய் அளவு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் சீரகத்தூள் - 4 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 150 கிராம் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கல் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 2 குழி கரண்டி
Advertisment
Advertisements
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்துக் கொள்ளவும். அந்த புளி தண்ணீரில் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்க்கவும். பிறகு அதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கல் உப்பு ஆகிவற்றை ஒன்றன் பின் சேர்க்கவும். இதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்போது, ஒரு கடாய் எடுத்து அதனை சூடேற்றவும். கடாய் சூடானதும் அதில் ஏற்கனவே கரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து விடவும். குழம்பு நன்கு கொதிக்க தொடங்கியதும் மீன் சேர்க்கவும். இவை கொதிக்க தொடங்கிய 4-வது நிமிடத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் மட்டும் சேர்க்கவும்.
மீன் வெந்ததும் குழம்பை கீழே இறக்கி வைத்து விடலாம். இப்போது நீங்கள் எதிர்பார்த்த பாட்டி காலத்து மீன் குழம்பு ரெடி.