டைப் 2 சர்க்கரை நோய் ஏற்பட்ட பின், அதிக கரோரிகளை கொண்ட உணவை சாப்பிடக்கூடாது. இதனால் நிச்சயம் இனிப்பு நிறைந்த உணவுகளை நாம் சாப்பிட முடியாது.
சர்க்கரை நோய் பொருத்தவரை ஜிஐ ( GI) கிளைசிமிக் இண்டக்ஸ் அதிகமாக உள்ள உணவுகளை நாம் சாப்பிடக் கூடாது. இந்த கிளைசிமிக் இண்டக்ஸ் என்றால் உணவு சாப்பிட்ட பிறகு ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் விகிதம் மேலும் கார்போஹைட்ரேட்டின் தரம் ஆகியவற்றை குறிக்கும்.
இந்நிலையில் இயற்கையாகவே இனிப்பு உள்ள கிரேப்ஸை சாப்பிடலாமா என்று கேள்வி எழும். பழங்களில் இருக்கும் இனிப்பு, மற்ற இனிப்புகள் போல் ரத்த சர்க்கரையை உடனே அதிகரிக்காது. ஆனால் ரத்த சர்க்கரையில் தாக்கம் இருக்கும்.

இந்நிலையில் கிரேப்சில், வைட்டமின்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட், பாலிபினால்ஸ், பிளாவோநாய்ட்ஸ் இருக்கிறது. இது சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கொண்டது.
மேலும் கிரேப்சின் கிளைசிமிக் இண்டெக்ஸ் கொண்டது, இது குறைந்த எண்ணிக்கைதான். இந்நிலையில் கிரேப்ஸ் டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்லாம்.
ஆனால் அடர் நிற கிரேப்ஸ் எடுத்துக்கொள்ளவேண்டும். சிவப்பு அல்லது கருப்பு நிற கிரேப்ஸ் சாப்பிடலாம். பச்சை நிற கிரேப்ஸை விட இது சிறந்த தேர்வு.
கண்டிப்பாக கிரேப் ஜூஸ் எடுத்துக்கொள்ள கூடாது. கிரேப்ஸின் தோலுடன்தான் நாம் சாப்பிட வேண்டும்.