Advertisment

புற்று நோயை தடுக்கும் ரிசர்வட்டால்… நம்மூர் பழத்தில் இருக்கு; மிஸ் பண்ணாதீங்க!

இவ்வளவு நாட்களாக திராட்சையை நாம் அனைவருமே தவறாக சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இனியாவது திராட்சையை எப்படி சாப்பிடலாம் என்று தெரிந்துக்கொண்டு சாப்பிடுங்களேன்.

author-image
WebDesk
New Update
grapes

திராட்சைப்பழம் சாப்பிடும் முறை

திராட்சை தற்போது அனைத்து பருவங்களிலும் கிடைக்கிறது. மேலும் பெரும்பாலானோர் விரும்பி உட்கொள்ளும் பழங்களில் திராட்சையும் ஒன்றாகும் .  இந்த திராட்சையில் வைட்டமின் சி மட்டுமின்றி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நீர்ச்சத்து, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளதால், இதை உட்கொள்ளும் போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அப்படிப்பட்ட திராட்சையில் இருக்கும் கொட்டையைதான் நாம் சாப்பிடாமல் கீழே துப்புகிறோம். 

Advertisment

ஆம், திராட்சையில் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை கீழே துப்பி விடுகிறோம். ஆனால் அது தவறு திராட்சை பழத்தின் முக்கியமான சத்தே அந்த திராட்சையின் கொட்டையில் தான் உள்ளது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 

திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிரம்பியுள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தி, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. முக்கியமாக இதில் ரெஸ்வெராட்ரால் என்று அழைக்கப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது புற்றுநோய் செல்களைத் தடுக்கும் மற்றும் அதன் வளர்ச்சியை அழிக்கும் திறன் கொண்டது.

மேலும் திராட்சையில் கேட்டசின்கள், க்யூயர்சிடின் மற்றும் அந்தோசையனின்கள் போன்ற புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பிற சக்தி வாய்ந்த ஆன்டி. ஆக்ஸிடன்டுகளும் உள்ளன. இத்தனை சத்துக்களும் உள்ள திராட்சை பழத்தை கொட்டையுடன் சாப்பிடும்போது தான் அதன் முழு பயனும் நம் உடலுக்கு கிடைக்கும்.

உலகத்திலேயே மூலிகை வணிகத்தில் முதல் இடத்தில் இருப்பது திராட்சையின் விதைதான். அந்த திராட்சையின் விதையில் ரிசர்வட்டால் என்கிற பொருள் உள்ளது. இந்த பொருள் நேரடியாக புற்றுநோயை தடுக்க கூடியது. இந்த திராட்சையை எப்போதும் கொட்டையுடன் தான் சாப்பிட வேண்டும். அந்த கொட்டையில்தான் அதிக சத்தும் நேரடியாகவே புற்றுநோய் உண்டாவதை தடுக்கும் பயனும் உள்ளது.

இனி கடைகளில் வாங்கும் போது திராட்சை விதையுடன் இருப்பதையே வாங்க வேண்டும். குறிப்பாக திண்டுக்கல் திராட்சை மிகவும் சுவையாகவும் நல்ல சத்துடனும் இருக்கும். இந்த திண்டுக்கல் திராட்சையை அதிகம் வாங்கி சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லது. அதிலும் திண்டுக்கல் திராட்சையை கொட்டையுடன் மென்று நன்றாக சாப்பிட வேண்டும்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

eating Benefits of consuming grapes everyday
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment