காய்கறி இல்லாத நேரத்தில் ஈஸியான டேஸ்டியான ஒரு குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி
பூண்டு
எண்ணெய்
சீரகம்
மிளகாய் தூள்
உப்பு
தயிர்
காய்கறி இல்லாத போது 5 நிமிடத்தில் செய்யுங்க சாதம், சப்பாத்திக்கு சூப்பர் | Garlic Gravy In Tamil
செய்முறை
மல்லி விதைகளை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் பூண்டையும் தட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நசுக்கி வைத்துள்ள கொத்தமல்லி அதனுடன் சீரகம் சேர்த்து வதக்கவும்.
அதில் நசுக்கி வைத்துள்ள பூண்டையும் சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்க வேண்டும். இதில் விருப்பப்பட்டால் வெங்காயம் சேர்க்கலாம். அதில் மிளகாய் தூள் கலந்து விடவும்.
இந்த நேரத்தில் அடுப்பை லோ ஃபிலேமில் வைக்க வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். மேலும் அதில் தயிரை சேர்க்க வேண்டும். தயிரை மிக்ஸியில் கட்டி இல்லாமல் அரைக்க வேண்டும்.
பின்னர் உப்பு சேர்த்து கலந்து விடவும். அதில் சிறிது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதி விட்டு இறக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“