அசைவம் பலருக்கும் பிடிக்கும். சிக்கன், மட்டன், மீன் எனப் பல வகை ரெசிபிகளை விரும்பி சாப்பிடுவோம். வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமை அசைவம் சாப்பிடவில்லை என்றால் நாளே போகாது என்றும் பலரும் கூறுவர். அந்தவகையில் இந்த ஞாயிற்றுக் கிழமையில் யம்மியான, சுவையான க்ரீன் சிக்கன் டிக்கா செய்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
புதினா - 2 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - சிறிதளவு
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி அனைத்தையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து எடுத்த சிக்கன் போட்டு அதனுடன் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் பிரிட்ஜில்
ஊற வைக்கவும். பின்னர் அதை எடுத்து மைக்ரோவேவ் ஓவனில் கிரில் செய்து எடுக்கவும். மைக்ரோவேவ் ஓவன் இல்லையெனில், அடுப்பில் கடாய் பேன் வைத்து நெய் விட்டு, மிதமான சூட்டில் சிக்கனை போட்டு வேக விட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான க்ரீன் சிக்கன் டிக்கா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"