சுவையான, கார சாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது பற்றி பார்ப்போம்.
பச்சை மிளகாய் – 15
சின்ன வெங்காயம் – 10-12
இஞ்சி – 2 இன்ச் அளவு
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் – ½ டீ ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ¼ டீ ஸ்பூன்
வெந்தயம் – ¼ டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ¼ டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு – ¼ டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
வெல்லம் – சிறிதளவு
செய்முறை
பச்சை மிளகாயை நன்றாக கழுவி காம்புகளை நீக்கி காய வைக்க வேண்டும். பின் மிளகாய்களை நீளவாக்கில் நடுவில் மட்டும் கிரீ தனியாக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியையும் நறுக்கி வைக்கவும். அடுத்து சிறிதளவு புளியை தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்நததும் வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து பொரிய விடவும் , கடலை பருப்பு. உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வறுக்கவும். பின் அதனுடன் கீரி வைத்த பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
அடுதது இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்க்கவும். கடைசியாக சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். இப்போது குழம்பு கெட்டியாக வந்ததும் இறக்கவும். அவ்வளவு தான் சுவையான, கார சாரமான பச்சை மிளகாய் குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“