பயிர் வகைகள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். பல்வேறு வகை பயிர்கள் உள்ளன, பயிர் வகைகளை குழம்பு அல்லது பொறியலாக சாப்பிட அப்படியே சாப்பிட குழந்தைகள் அடம்பிடிப்பர். அந்தவகையில் தோசை எல்லோரும் விரும்பி சாப்பிடுவர். பச்சை பயிரிலும் தோசை செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பச்சைப் பயறு – 2 கப்
அரிசி – 3 தேக்கரண்டி
வெங்காயம் – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சைப் பயறு மற்றும் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி குறைந்தது 6 மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். (காலை செய்வதாக இருந்தால், இரவே ஊற வைத்துவிடவும்). பின்னர் அதனை தோசை மாவுப் பதத்திற்கு, அரசி அளவிற்கு ஏற்ப மிக்ஸி, கிரைண்டரில் போட்டு அரைக்கவும். இதற்கிடையில், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், அரைத்த பச்சைப் பயறு மாவுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் , இஞ்சி உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி, பச்சை பயிறு மாவு ஊற்றவும். அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி, எண்ணெய்யை ஊற்றி, திருப்பிப்போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் பச்சை பயறு தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“