பாசி பயறு ஊட்டசத்து நிறைந்தது. பாசி பயறில் லட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். குறிப்பாக பாசி பயறு பெண்களுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
பாசி பயறு - 200 கிராம்
நாட்டுச் சர்க்கரை- 250 கிராம்
வேர்கடலை - 100 கிராம்
ஏலக்காய் - 4
உப்பு - சிறிதளவு
நெய் - 3 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாசிபயறு சேர்த்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்துள்ள பாசிபயறு மாவு கலவையை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும். இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். அவ்வளவு தான் ஊட்டச்சத்து நிறைந்த பாசி பயறு லட்டு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”