வெங்கடேஷ் பட் மனைவி சமைத்ததில் பட்டுக்கு பிடித்தது இந்த க்ரீன் குருமா இப்படி ஒரு முறை டிரை பண்ணுங்க
தேவையான பொருட்கள்
2 கிராம்பு
2 ஏலக்காய்
அரை துண்டு இஞ்சி
6 பச்சை மிளகாய்
அரை கப் புதினா
அரை கப் கொத்தமல்லி
கால் மூடி தேங்காய்
7 முந்திரி பருப்பு
2 ஸ்பூன் நெய்
எண்ணெய் 1 ஸ்பூன்
1 கொத்து கருவேப்பிலை
1 ஸ்பூன் சோம்பு
1 நறுக்கிய வெங்காயம்
உப்பு
2 உருளைக்கிழங்கு
8 பீன்ஸ்
அரை காலிபிளவர்
செய்முறை : மிக்ஸியில் கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லியை அரைத்துகொள்ளவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து தேங்காய், முந்திரியை சேர்த்து அரைத்துகொள்ளவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து ஒரு உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிபிளவரை நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய், சோம்பு, கருவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். நன்றாக வந்தங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து கிளரவும். தொடர்ந்து நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தேங்காய் அரைத்ததை சேர்த்து உப்பு சேர்த்து கிளரவும்.