தாம்பத்தியத்தில் ஆர்வத்தை அதிகரிக்கும் இந்தக் கீரைகள்... இப்படி சமைத்து சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன்
விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும், எண்ணிக்கையையும் மேம்படுத்தும் வகையில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய சில உணவு வகைகளை மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.
விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும், எண்ணிக்கையையும் மேம்படுத்தும் வகையில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய சில உணவு வகைகளை மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் திருமணமாகி குழந்தையின்மைக்காக சிகிச்சை பெறுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். இதில் ஆண்களின் விந்தணுக்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால் இன்றைய சூழலில் நிறைய பேருக்கு தாம்பத்யத்தில் ஈடுபடுவதில் சிக்கல் இருக்கிறது. அவர்கள் எல்லாம் எடுத்து கொள்ள வேண்டிய முக்கியமான உணவை பற்றி டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
விந்தணுக்களின் தரம் சரியான முறையில் இல்லாததும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் பிரச்சனையை நினைத்து மிகுந்த பயமோ அல்லது பதற்றமோ அடைய தேவை இல்லை.
ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க சித்த மருத்துவம் உதவி செய்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மூலிகையில் இருந்து வரும் சத்துகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.
இதற்காக சில உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். அந்த வகையில் நிறைய கீரை வகைகளை சாப்பிடலாம். ஏனெனில், கீரைகளில் செலினியம், மெக்னீஷியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.
Advertisment
Advertisements
சிறுகீரை, பொன்னாங்கண்ணி, தூதுவளை, முருங்கைக் கீரை மற்றும் பசலைக் கீரை ஆகியவை நம் உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மட்டுமின்றி உடல் உறவில் நாட்டம் ஏற்படுத்துகின்றன என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
இவற்றை பாசிப்பருப்பு மற்றும் தேங்காயுடன் சேர்த்து சமைத்து பொறியலாக சாப்பிடலாம். இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த உணவு வகைகளை சாப்பிடும் போது பிரச்சனைகளின் வீரியம் குறையும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.