அரோக்கியமாகவும் அதேவேளையில் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நம்ம அனுதா குப்புசாமி செய்யும் பச்சை பயறு புலாவ் வீட்டில் செய்து பாருங்க. பச்சை பயறில் அதிக புரத சத்து இருப்பதால் நமது உடலுக்கு அதிக அரோக்கியம் தருகிறது. பச்சை பயிறு புலாவ் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி- 1 கப்
பச்சை பயிறு – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
வெங்காயம்- 1 மெலிதாக நறுக்கியது
தக்காளி- 1 நறுக்கியது
கொத்தைமல்லி- 1 கொத்து
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய்-3
இஞ்சி- சிறிய துண்டு
பூண்டு -தேவைக்கேற்ப
சீரகம்- 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய்- 3 டேபிள் ஸ்பூன் , வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன், பிரியாணி இலை- 1 , பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு

செய்முறை ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு எடுத்துகொள்ளவும். இதை நீரில் 2 மணி நேரம் ஊரவைக்கவும். பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்த பிறகு 20 நிமிடங்கள் வரை ஊரவைக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், துருவிய தேங்காய் ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து அரைத்து எடுத்துகொள்ளவும்.

தற்போது அடுப்பில் குக்கர் வைத்து, அதில் நெய் ஊற்றி, நெய் நன்கு காய்ந்ததும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை இத்துடன் சேர்க்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தை இத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன், நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். தக்காளி மிரதுவானதும், அத்துடன் தேங்காய் அரைப்பை சேக்கவும்.

தொடர்ந்து கிளரிவிடவும். தற்போது ஊற வைத்திருந்த அரிசியை சேர்க்கவும், தற்போது மெதுவாக கலக்கவும். இதேபோல் பச்சை பயிறை சேர்க்க வேண்டும். தற்போது தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கலக்கவும். தற்போது குக்கரை மூடவும். 2 அல்லது மூன்று விசில் விட்டு எடுத்தால் ஆரோக்கியமான பச்சைபயறு புலாவ் ரெடி