ஆரோக்கிய உணவு உடல் நலத்திற்கு நல்லது. நம் வீட்டில் மாலை நேரத்தில் டீ, காபியுடன் ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்போம். குழந்தைகளும் பள்ளி முடிந்து வந்து ஸ்நாக்ஸ் சாப்பிடுவர். இந்தநேரத்தில் சத்தான உணவில் ஸ்நாக்ஸ் கொடுக்கலாம். அதுவும் அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் விருப்பத்தோடு சாப்பிடுவர். அந்தவகையில் பச்சை பட்டாணியில் வடை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த பட்டாணி – 1 கப்
பொட்டுக்கடலை – 1/4 கப்
வெங்காயம் – 1
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் காய்ந்த பட்டாணியை பட்டாணியை சுடுநீரில் போட்டு 5 மணிநேரம் வரை நன்கு ஊற வைக்க வேண்டும். பின் அந்த பட்டாணியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் அதே மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த பொடியை அரைத்து வைத்துள்ள பட்டாணியுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் கலவையை எடுத்து தட்டையாக தட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பட்டாணி வடை தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/