டீ, காபி உடன் சுவையான பட்டாணி போண்டா: இப்படி செய்யுங்க!

பட்டாணி போண்டா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

பட்டாணி போண்டா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Green peas bonda

Food

பட்டாணி போண்டா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

பச்சைப் பட்டாணி - 200 கிராம்
கேரட் துருவல் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி- 1
பச்சை மிளகாய்- 2
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
எண்ணெய் - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு

மாவு தயார் செய்ய

Advertisment
Advertisements

கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு

செய்முறை

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும். மசித்த பச்சை பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.

இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இப்போது சூப்பரான, சுவையான பச்சைப் பட்டாணி போண்டா ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: