மாலை வேலையில் டீ,காபி உடன் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மனத்திற்கு இதமாக இருக்கும். இதற்கு எப்போதும் பஜ்ஜி, போண்டா, வடை செய்து சாப்பிடுவோம். ஆனால் புதுமையாக இந்த ரெசிபி செய்து பாருங்க. பச்சை பட்டாணி பன்னீர் கட்லெட் செய்து பாருங்க. வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டே செய்யலாம். சிப்பிள், ஈஸி ரெசிபி.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி – 3/4 கப்
அரிசி மாவு – 1/2 கப்
கடலை மாவு – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பன்னீர் – 1/2 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பன்னீரை துருவி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில், மசித்த பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பன்னீர், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும். சற்று கெட்டியாக கலந்து எடுத்துக் கொள்ளவும். பின் அந்த கலவையை கட்லெட் வடிவத்திற்கு தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை போட்டு எடுக்கவும். பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும். அவ்வளவு தான் பச்சை பட்டாணி பன்னீர் கட்லெட் ரெடி. தக்காளி சாஸ் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.