கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
வெறும் இரண்டு பொருட்களை வைத்து பேக்கரியில் கிடைக்கும் ஸ்வீட் போல ஒரு ஸ்வீட் ஈஸியாக செய்துவிடலாம். இந்த ஸ்வீட்டை நீங்கள் கூட வீட்டில் ட்ரை பண்ணலாம். கோடை விடுமுறை வந்துடுச்சு அதனால பிள்ளைகளுக்கு தினமும் ஏதாவது செய்து கொடுக்க வேண்டி இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த ஒரு ஸ்வீட்டையும் ட்ரை பண்ணி பாருங்க. இதற்கு பால் நெய் எதுவுமே தேவையில்லை.
வேர்க்கடலை மற்றும் சர்க்கரை வைத்து சுவையான ஸ்வீட் எப்படி செய்வது என்று சூப்பர் கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை சர்க்கரை
செய்முறை
வேர்க்கடலை ஒன்னரை கப் எடுத்து அதை வறுத்து தோல் உரித்து எடுத்து கொள்ளவும். பின்னர் இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனை நன்கு பவுடராக அரைத்து கொள்ளவும். மிக்ஸியில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் தேவையான அளவு சர்க்கரை எடுத்து தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதத்திற்கு பாகு செய்யவும். பின்னர் இந்த பாகில் வேர்க்கடலை பொடியை சேர்த்து பிரட்டி விடவும்.
கையில் மாவு பிசுபிசு வென்று ஒட்டாமல் உருண்டு வர வேண்டும். அப்போது அதை எடுத்து சூடு இல்லாமல் ஆறவைத்து கொள்ளவும். அடுத்ததாக அதில் பாதி மாவில் பிடித்த கலர் சேர்த்து உருண்டையாக திரட்டி எடுக்கவும்.
பின்னர் வெள்ளை மாவை சப்பாத்தி மாதிரி தேய்த்து நடுவில் கலர் மாவை வைத்து உருட்டி எடுக்கவும். வெள்ளை மாவிற்குள் இந்த பச்சை மாவை வைத்து உருட்டி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்தால் அவ்வளவுதான் கடைகளில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் ரெடி ஆகிவிடும்.