இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில், இயற்கை உணவுகளின் நன்மைகளையும் பாரம்பரிய உணவில் உள்ள நன்மைகளையும் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டத்தில் மருத்துவர் கு. சிவராமனுக்கு முக்கிய பங்கு உண்டு.
மருத்துவர் கு. சிவராமன் நமது பாரம்பரிய உணவுகளில் உள்ள சத்துப் பொருட்கள், நன்மைகள் என பலவற்றையும் அறிவியல் மொழியில் பேசியது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வகையில், மிகச் சுவையான, மிகச் சிறந்த சத்துள்ளது, குழந்தைகளுக்கு நல்லது என்று நிலக்கடலை சட்னியை மருத்துவர் கு. சிவராமன் பரிந்துரைக்கிறார்.
நிலக்கடலையை கலக்கா, வேர்க்கடலை, மல்லாட்ட, மணிலா ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு பெயரில் அழைக்கிறார்கள். இங்கே நாம் நிலக்கடலை என்ற பெயரைப் பயன்படுத்துகிறோம்.
நிலக்கடலையில் அரைக்கிற சட்னி கம்பு தோசை, சோள சோதை ஆகிய சிறுதானிய உணவுகளுக்கு சரியாக தொட்டுக்கொள்ளக் கூடிய பொருத்தமான, ஆரோக்கியம் தரக்கூடிய சட்னி நிலக்கடலை சட்னி என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார்.
நிலக்கடலையை எடுத்து வறுத்து, அதனுடன் சிறிது அளவு தேங்காய், மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கப்படும் நிலக்கடலை சட்னியில் புரதச்சத்து நிறையக் கிடைக்கும்.
நிலக்கடலைச் சட்னியில் இயல்பாகவே உடலுக்கு நல்லதைத் தரக்கூடிய இரும்புச் சத்து இருக்கிறது, துத்தநாகச் சத்து இருக்கிறது, புரதச்சத்து நிறைய இருக்கிறது. வாரத்துக்கு ஒருநாள், இரண்டு நாள் இந்த நிலக்கடலைச் சட்னியை உணவில் எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார்.
அதே நேரத்தில், இந்த நிலக்கடலை சட்னி செய்யும்போது நிறைய எண்ணேய் ஊற்றி சாப்பிடுவது அவ்வளவு நல்லது இல்லை என்று அறிவுறுத்துகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“