உடல் எடையை குறைக்க வேர்கடலை.. எப்படி சாத்தியம்?

நம்மில் பலருக்கு சில உணவு பொருட்கள் நம் கண் முன்பே இருந்தலும் அதன் மகிமை தெரியாது. நாம் குறைத்து மதிப்பிடும் பல உணவுகள்தான் நமக்கு அதிக நன்மைகளை அளிக்கிறது. இப்படிபட்ட உணவுதான் வேர்கடலை

நீங்கள் உடல் எடையை குறைக்க மணி கணக்கில் உடல் பயிற்சி கூடத்தில் நேரத்தை செலவிவீர்கள். ஆனாலும் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு உடல் எடை குறையாது. கடின உடற்பயிற்சி மட்டும் உடல் எடையை குறைத்துவிடாது. சரியான உணவுத் தேர்வுதான் உடல் எடையை குறைக்கும். மேலும் சரியான உணவு முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இதுவே உங்கள் வேத மந்திரமாக இருக்க முடியும். நம்மில் பலருக்கு சில உணவு பொருட்கள் நம் கண் முன்பே இருந்தலும் அதன் மகிமை தெரியாது. நாம் குறைத்து மதிப்பிடும் பல உணவுகள்தான் நமக்கு அதிக நன்மைகளை அளிக்கிறது.

இப்படிபட்ட உணவுதான் வேர்கடலை. என்ன பாஸ் வேர்கடலைல அப்படி என்ன இருக்குனு நீங்க கேட்கலாம் . ஆனால் அதில் நமக்கே தெரியாமல் அதிக நன்மைகள் இருக்கிறது . இதில் அதிக கலோரிகள் இருந்தாலும் இதில் இருக்கும் நன்மை தரும் கொழுப்பு வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடல் பருமன், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதிலிருக்கும் நன்மை தரும் கொழுப்பு சத்து ஏற்கனவே நமது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை நம் உடல் பயன்படுத்த உதவுகிறது.

வேர்கடலையை வறுத்தோ அல்லது அவித்தோ சாப்பிடலாம். மேலும் கடலை எண்ணெய், பீநட் பட்டர் போன்றவற்றை உணவில் சேர்த்துகொள்ளலாம். வேர்கடலை சாப்பிடால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதற்கு குறை கிளைசிமிக் இண்டக்ஸ் இருக்கிறது. அதாவது சக்கரை நோயாளிகள் இதை பயப்படாமல் சாப்பிடலாம்.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Groundnut great help to weight loss