Advertisment

காலையில் வெறும் வயிற்றில் கொய்யா ஜூஸ்: 5 நன்மைகள் இருக்கு!

கொய்யாவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, அவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Guava juice health Benefits

Guava juice health Benefits

கொய்யாப்பழம் எடை இழப்புக்கு உகந்த பழமாகும், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. அவை உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும்.

Advertisment

ஆனால் தொடர்ந்து வெறும் வயிற்றில் கொய்யா ஜூஸ் உட்கொள்ளும் போது, ​​அது உங்கள் உடலின் அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், கொய்யா ஜூஸ் ஒரு மாய பானமாகும், இது ஒவ்வொரு உடல் கூறுகள் மற்றும் உறுப்புகளில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. கொய்யாவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, அவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

கொய்யா ஜூஸ் எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

3-4 மீடியம் சைஸ் கொய்யாப்பழங்கள்

இரண்டு கப் குளிர்ந்த நீர்

1 தேக்கரண்டி சர்க்கரை (தேவைப்பட்டால்)

கருப்பு உப்பு (சுவைக்கு ஏற்ப)

சில ஐஸ் கட்டிகள்

சில புதினா இலைகள்

செய்முறை

கொய்யாப்பழத்தை எளிதில் அரைக்க, அதை தண்ணீரில் நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டவும்.

அவற்றை ஒரு பிளெண்டரில் சேர்த்து, அவை மென்மையான பேஸ்டாகும் வரை வரை கலக்கவும். பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் 15 முதல் 20 விநாடிகள் அடிக்கவும். இதை  ஒரு கிளாஸில் வடிகட்டவும்.

புளிப்பு சுவைக்கு, நீங்கள் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம். சர்க்கரை மற்றும் கருப்பு உப்பு சேர்த்த பிறகு சர்க்கரை கரையும் வரை கிளறவும்.

வெறும் வயிற்றில் கொய்யா ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்:

சிறந்த கண் பார்வைக்கு

கண்களை ஆரோக்கியமாகவும், மாகுலர் சிதைவு, கண்புரை போன்ற கண் தொடர்பான நோய்களிலிருந்து விடுபடவும் வைட்டமின் ஏ அவசியம். கொய்யா சாற்றில் இது அதிக அளவில் உள்ளது. இது கண் செல்களைப் பாதுகாக்கிறது மற்றும் கண்பார்வை பலவீனமடைவதைத் தடுக்கிறது.

மலச்சிக்கலைத் தடுக்கிறது

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொய்யா சாற்றை உட்கொள்வது மலச்சிக்கலைப் போக்கவும் தடுக்கவும் உதவும். இதிலிருக்கும் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் வழக்கமான குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது. மேலும் மலச்சிக்கலின் போது ஒரு நபர் உணரும் வீக்கம், வயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது.

சருமத்தை மேம்படுத்துகிறது

சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதில் வைட்டமின் சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது, கொய்யா சாற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கொய்யாவில் இருக்கும் அதிக அளவு தண்ணீர் சருமத்தின் நீரேற்றத்தை அதிகரித்து, முகப்பருவிலிருந்து விலக்கி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது

கொய்யா சாறு, அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து காரணமாக உடல் எடையை பராமரிக்கவும் குறைக்கவும் உதவுகிறது, ஏனெனில் இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும், எனவே அதிகப்படியான பசி உணர்வை தடுக்கிறது. இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன, இது காலையில் முதலில் சாப்பிடுவதற்கு சரியான பானமாக அமைகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கொய்யாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது  நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுவதால், உடலை நோய்களிலிருந்து விலக்கி வைக்கும். இது ஆன்டிபாடிகளின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது. வைரஸ் காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தை கூட தடுக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment