வீட்டில் இருக்கக்கூடிய பச்சரிசி வைத்து சுவையான ஜூஸியான குலோப் ஜாமுன் எப்படி செய்வது என்று குறிஞ்சி டாட் காம் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பச்சரிசி நெய் உப்பு சர்க்கரை எண்ணெய் ஏலக்காய் தூள்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு அளவு கப் எடுத்து கொள்ளவும். அதில் 2 1/2 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து ஒரு பானில் உற்றவும். பின்னர் அதில் சிறிது உப்பு, நெய் சேர்த்து சூடாக்கவும்.
நன்கு தண்ணீர் கொதி வந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்கவும். மாவு கடாயில் ஒட்டாமல் உருண்டு வந்ததும் இதை நெய் தடவிய ஒரு தட்டில் போட்டு ஆறவைத்து பிசையவும்.
நான்கு பிசைந்து தேவைப்பட்டால் பால் பவுடர் ஒரு ஸ்பூன் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை எப்போதும் போல குலோப் ஜாமுன் உருண்டைக்காக சிறிது சிறிதாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பின்னர் ஒரு கப்பில் இரண்டு கப் சர்க்கரை 2 கப் தண்ணீர் சேர்த்து பாகு ரெடி செய்து வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் சுட்டு வைத்துள்ள உருண்டையை சர்க்கரைப்பாகில் போட்டு ஊற வைத்திருந்தால் சுவையான குலோப் ஜாமுன் ரெடியாகிவிடும்.