கடுமையான கை, கால் வலியைப் போக்க சுக்கு சேர்த்த உளுந்தங்கஞ்சி எப்படி தயாரிக்கலாம் என்று வீரன்வீடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
உளுந்து அரிசி இஞ்சி வெல்லம் அல்லது சர்க்கரை துருவிய தேங்காய்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், ஒரு பாத்திரத்தில் உளுந்து சேர்க்கவும். பின்னர், அரிசி மற்றும் ஒரு துண்டு இஞ்சி அதே பாத்திரத்தில் சேர்க்கவும். இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து மாவாக்கவும்.
இந்த மாவை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். கொதிக்கும் நீருடன் இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, கெட்டியாகும் வரை கிளறவும். வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அவ்வளவு தான் கஞ்சியை ஒரு கிளாஸில் ஊற்றி, துருவிய தேங்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் கைகால் வலி எல்லாம் பறந்து போகும். இந்த சுக்கு கலந்த உளுந்த கஞ்சியை தினமும் மூன்று வேளை தொடர்ந்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.