scorecardresearch

வெயிட் லாஸ்: பிளாக்ஸ் விதைகளை எப்படி எடுத்துக்கொள்வது? நாம் செய்யும் தவறு என்ன?

பிளக்ஸ் விதை அல்லது ஆளி விதைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. இது உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

பிளாக்ஸ் விதைகளை எப்படி எடுத்துகொள்வது?
பிளாக்ஸ் விதைகளை எப்படி எடுத்துகொள்வது?

பிளக்ஸ் விதை அல்லது ஆளி விதைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. இது உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வீக்கத்தை குறைக்கும் தன்மை, ஆரோக்கியமான சருமம், ஆரோக்கியமான கூந்தலுக்கும் உதவுகிறது. இந்நிலையில் நாம் ஆளி விதைகளை தவறான முறையில் சாப்பிடுவதால் அதன் பலன்களை பெற முடிவதில்லை.

உடல் எடை குறைப்பது, மாதாவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் சிக்கல், பி.சி.ஓ.எஸ், இதய நோய், ரத்த கொதிப்பு ஆகியவற்றுக்கு தீர்வாக இது இருக்கும்.

ஆளி விதைகளில், ஓமேகா 3 பேட்டி ஆசிட் இருக்கிறது. இதை உடலால் தனியாக உற்பத்தி செய்ய முடியாது என்பதால் நாம் உணவு மூலமே இதை எடுத்துக்கொள்ள முடியும்.

இதில் இருக்கும் பைடோ ஈஸ்டோஜென், உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவை சீராக வைக்கிறது.  இதனால் பி.சி.ஓ.எஸ் சிக்கல் ஏற்படாது. மேலும் இதில் பைடோ ஸ்டரால் இருப்பதால், நல்ல கொலஸ்ட்ராலை ஊக்குவிக்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.

எந்த முறையில் சாப்பிட வேண்டும்?

ஆளி விதைகளை நன்றாக வறுக்க வேண்டும். அதை நன்றாக பொடியாக்க வேண்டும். அதை ரொட்டி, கூட்டு, சாலட், பிரட், பேன்கேக் ஆகியவற்றில் தூவி சாப்பிடலாம். நாம் நன்றாக வறுக்கவில்லை என்றால், இது சரியாக ஜீரணம் ஆகாது. நாம் நன்றாக பிடித்து சாப்பிட்டால் மட்டுமே இதில் இருக்கும் சத்துக்கள் உடல் எடுத்துகொள்ளும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Have you been consuming flax seeds the wrong way