scorecardresearch

தலைவலி தாங்க முடியலையா ? தலைவலி நீங்க இந்த 3 உணவுகள் ரொம்ப முக்கியம்

உங்களுக்கு தலைவலி தொடர்ந்து வந்தால் நிச்சயமாக மருத்துவரை முதலில் காண்பித்துவிடுங்கள். கண் பார்வையில் கோளாறு, ஒற்றை தலைவலி, சைனஸ் தொல்லை இருந்தாலும் தலைவலி அடிக்கடி வரும். இந்த காரணங்கள் இல்லாமல் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால் வீட்டிலேயே சில உணவை எடுத்துக்கொண்டு, இதை சரிபடுத்த முடியும்.

தலைவலி

இஞ்சி; இதில் வீக்கத்திற்கு எதிரான குணங்கள் இருக்கிறது. இஞ்சியில் ஜிஞ்சரால் இருக்கிறது. இது வலி நிவாரணியாக செயல்படுகிறது. நீங்க இஞ்சியை துருவி, தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

தர்பூசணி- குறிப்பாக உடலுக்கு தேவையான தண்ணீர் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் தலைவலி ஏற்படும். தர்பூசணியில் 95 % தண்ணீர் இருப்பதால் இது தலைவலியை போக்க உதவும். மேலும் இதில் எலக்ட்ரோலைட், பொட்டாஷியம் இருக்கிறது. இது உடலில் உள்ள திரவ அளவை சீராக வைத்துக்கொள்கிறது.

பொதினா டீ: இது உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். பொதினாவில், மெந்தால் இருக்கிறது. இது வலி நிவாரணியாக செயல்பட்டு தலைவலியை குறைக்கும். அதீத பதற்றம் மற்றும் பதற்றம் தொடர்பான மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு புத்துணர்வை தரும்.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Headache relief three foods