ஓமத்தில் எப்போதும் தனித்துவம் வாய்ந்த வாசனை இருக்கிறது. இதன் கசப்பான சுவையை காட்டிலும், இதன் வாசனைக்காக இதை நாம் சமையலில் சேர்ப்போம். நமது வீட்டு தோட்டத்தில் அழகுக்காகவும் ஓமம் வளர்ப்போம்.
வயிறு வலித்தால், அதிலிருந்து குணமடைய ஓமத்தை நாம் வாயில்போட்டு மெல்ல வேண்டும் என்று கூறுவார்கள். வயிற்று சமந்தமான பிரச்சனைகளுக்கு ஓமம் தீர்வாக இருக்கிறது.
ஓமம் சாற்றுடன், தேன் கலந்து குடித்தால், சளி பிரச்சனை தீரும். மேலும் குழந்தைகளுக்கு இருமல் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

மேலும் அஜீரணம் ஏற்படாமல் தடுத்து, நன்றாக ஜீரணமாக உதவும். வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தை தடுக்கும்.
நமது அன்றாட உணவு முறையில் ஓமம் கலந்து சாப்பிட்டால் மிகவும் நன்மை ஏற்படும்.
துளசி மற்றும் ஓமத்தை சேர்ந்து ஜீஸ் தயாரித்து குடிக்கலாம். சுவைக்கு அதில் சிறிது உலர்ந்த மாங்காய் பொடி சேர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“