எடை குறைப்பு... தண்ணீரில் ஊற வைக்காம இந்த விதையை சாப்பிட்டால் ஆபத்து: டாக்டர் இளவரசி
உடல் எடை குறைப்பில் சியா விதைகள் எவ்வாறு பயன்படுகிறது என்று மருத்துவர் இளவரசி தெரிவித்துள்ளார். இவற்றை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று மருத்துவர் இளவரசி தெரிவித்துள்ளார். அதேபோல், இதில் அதிகமாக கலோரிகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
அந்த வகையில் ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளில் இரண்டு கிராம் அளவிற்கு புரதம், 4 கிராம் ஃபைபர், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் ஆகியவை இருக்கிறது என மருத்துவர் இளவரசி தெரிவித்துள்ளார். இது தவிர பி காம்ப்ளக்ஸ், கால்சியம், மெக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் சியா விதைகளில் இருக்கின்றன.
சியா விதைகளில் இருக்கும் ஃபைபர் மற்றும் நல்ல கொழுப்புகள் ஆகியவை நம் வயிற்றை சென்றடைந்து செரிமானத்தை தாமதப்படுத்துகின்றன. எனவே, மற்ற உணவுகளில் இருக்கும் சத்துகளை நிதானமாக பெற்றுக் கொள்வதற்கு இவை உதவி செய்கிறது. மேலும், இவை பசி உணர்வையும் கட்டுப்படுத்துகின்றன.
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும் சீராக பராமரிப்பதற்கு சியா விதைகள் பயன்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். இதில் இருக்கும் சத்துகள் இருதயம், எலும்பு, பற்கள் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதன்படி, சியா விதைகளை சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்து சாப்பிடுவது நன்மை அளிக்கும் என்று மருத்துவர் இளவரசி தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
அதே சமயம், சியா விதைகளை தண்ணீரில் ஊற வைக்காமல் அப்படியே சாப்பிடக் கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், இதற்கு தண்ணீரை உறிந்து கொள்ளும் தன்மை இருப்பதால் இவை உணவுக் குழாய்களில் சிக்கிக் கொண்டு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்று மருத்துவர் இளவரசி தெரிவித்துள்ளார்.
துரித உணவுகளுக்கு பதிலாக சியா விதைகளை ஆரோக்கியமான சிற்றுண்டியாக சாப்பிடலாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
நன்றி - Ask Dr Ela Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.