/indian-express-tamil/media/media_files/2025/01/07/VRwfko4OQ2noxZjqnul3.jpg)
காலை எழுந்ததும் நம்மில் நிறைய பேருக்கு ஏதாவது சூடாகக் குடிக்க வேண்டும் என்று தோன்றும். பலருக்குக் காபி குடிக்க வேண்டும். அதற்கு அடுத்ததது தான் மற்ற வேலைகளே ஓடும். இன்னும் கொஞ்சம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பவர்கள் காலையில் வெந்நீர் அல்லது வெந்நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்துக் குடிப்பதுண்டு. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா?
காலையில் தூங்கி எழுந்ததும் அரை ஸ்பூன் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடலில் நிறைய நல்ல மாற்றங்கள் தெரியும்.
நெய் மிக அதிக அளவில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு வைட்டமின் ஏ நிறைந்தது. பிட்யூ்ரிக் அமிலம் நிறைந்த ஓர் உணவுப் பொருள் என்றால் அது நெய் தான். அதேபோல நெய்யில் வைட்டமின், ஈ மற்றும் டி அதிக அளவில் இருக்கிறது. அதோடு மிக சில உணவு வகைகளில் மட்டுமே இருக்கிற லினோலிக் அமிலம் நெய்யில் மிக அதிக அளவில் இருக்கிறது.
40 வயதுக்கு மேல் எலும்புத் தேய்மானம் காரணமாக மூட்டுவலி ஏற்படலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால், அது தசைகளுக்கு லூப்ரிகண்டாக செயல்பட்டு மூட்டு வலி, ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோராசிஸ் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
வறண்ட சருமம் உள்ளவர்கள் காலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் நெய் எடுத்தால், இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உருவாகின்றன. நெய் மெலனின் உற்பத்தியை ஊக்குவித்து, சருமத்தை பளிச்சிடச் செய்கிறது. மேலும், சரும நோய்கள் வராமலும் தடுக்கிறது.
நெய் மூளையில் உள்ள செல்களைத் தூண்டி, நரம்புகளைச் செயல்பட வைக்கும் வேலையைச் செய்கிறது. சிறுவயதிலேயே இப்படி நெய்யை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடப் பழகினால், வயதான பின்பு வரும் டிமென்ஷியா, அல்சைமர் போன்ற ஞாபகத் திறன் குறைபாடு, ஞாபக மறதி பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.
நெய்க்கு இயற்கையிலேயே புற்றுநோய் செல்களைச் செயல்படாமல் செய்யவும் அதை அழிக்கும் தன்மையையும் கொண்டிருக்கிறது. நெய்யை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்போது உடலில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி பெறுவதாலும் இயல்பாகவே செல்கள் புதுப்பிக்கப்படுவதாலும் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
தலைமுடி உதிர்தலை தடுக்க மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க, காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது, மேலும் வாரத்தில் ஒரு முறை நெய் தேய்த்து குளிப்பது பயனளிக்கிறது. நெயில் உள்ள புரதங்கள் தலைமுடியை உறுதியாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன.
நெய் இயற்கையாகவே நிறைய அமினோ அமிலங்கள் நிறைந்தவை. அதோடு ஒமேகா 3 மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் இது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. சிலர் உடல் மெலிதாக இருக்கும். ஆனால் தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் சிறிது நெய் சேர்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.