கொத்தமல்லி விதையை ஊறவைத்து... மாரடைப்பை தடுக்கும் மருந்து இதில் இருக்கு: டாக்டர் கார்த்திகேயன்
கொத்தமல்லி விதையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவை அனைத்தையும் மருத்துவர் கார்த்திகேயன் விவரித்துள்ளார். மேலும், கொத்தமல்லி விதைகளை பயன்படுத்தும் முறை குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
கொத்தமல்லி இலைகளும், விதைகளும் இல்லாமல் அன்றாட சமையல் நிறைவு பெறுவதில்லை. உலகின் பழமையான நறுமண பொருளாக கொத்தமல்லி விதைகள் இருந்து வருகிறது. இவை ஏறத்தாழ 9 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கொத்தமல்லி குறித்து பழமையான மருத்துவ குறிப்புகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
கொத்தமல்லி விதைகளை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் அதனை வடிகட்டி நீரை மட்டும் குடித்தால் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது. இதில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் நார்ச்சத்துகள் குடலில் வரும் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. மேலும், இதில் இருக்கும் லினலூல் என்ற வேதிப்பொருள் இருதயத்திற்கு நல்லது என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இவை கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது. மேலும், இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கும் இது உதவி செய்கிறது. மாரடைப்பை தடுக்கக் கூடிய ஆற்றல் கொத்தமல்லியில் இருக்கும் லினலூலுக்கு இருக்கிறது. எனவே, கொத்தமல்லி நம் அன்றாட உணவில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால், தாதுக்கள் இதில் குறைவாக இருக்கிறது. மறுபுறம், கொத்தமல்லி விதைகளில் வைட்டமின்கள் குறைவாகவும், தாதுக்கள் அதிகமாகவும் இருக்கிறது. வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவை கொத்தமல்லி இலைகளில் இருக்கிறது.
Advertisment
Advertisements
கொத்தமல்லி விதைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும், கால்சியம், மெக்னீஷியம், இரும்புச் சத்து போன்றவையும் இதில் நிறைந்திருக்கிறது. இது தவிர செலினியம், பொட்டாஷியம், சின்க் ஆகியவையும் இதில் காணப்படுகிறது. அதன்படி, கொத்தமல்லி விதைகளை வயதானவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
எனினும், சருமம் விரைவில் வயதான தோற்றம் அடைவதை கொத்தமல்லி இலைகள் தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும் பண்புகள் கொத்தமல்லிக்கு இருக்கிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த கொத்தமல்லியை நாம் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.