தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் வேர்க்கடலை எண்ணெய்யை சமையல் எண்ணெய்யாகப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல், மக்கள் வேர்க்கடலையை பச்சையாகவும், அவிச்சியும், வறுத்தும், ஊறவைத்தும் சாப்பிடுகிறார்கள். ஆனால், வேர்க்கடலை சாப்பிடுவதால் கொழுப்பு கூடுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்து டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
டாக்டர் கார்த்திகேயன் ஒரு கப்பில் 50 கிராம் வேர்க்கடலையையும் மற்றொரு கப்பில் 100 கிராம் வேர்க்கடலையையும் அளந்து எடுத்துக்கொள்கிறார். 100 கிராம் வேர்க்கடலையில் 600 மில்லி கிராம் கலோரி இருக்கிறது, இது சர்க்கரைக்கு வழிவகுக்கும். அதனால், 40- வயதுக்கு மேல், வேர்க்கடலையை குறைவாக எடுத்துக்க்கொள்ள வேண்டும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
மேலும், வேர்க்கடலையில், பாலி அன்சாச்சுரேட் கொழுப்பு என்கிற நல்ல கொழுப்பு, மோனோ சாச்சுரேட் கொழுப்பு அதிகமாக உள்ளது. சாச்சுரேட் கொழுப்பு குறைவாக உள்ளது.
மேலும், இதயத்துக்கு நன்மை செய்யும் மெக்னீசியம் 50 கிராம் வேர்க்கடலையில் 350 மி.கி உள்ளது என்றும் வேர்க்கடலையில் எலும்புக்கு வலு சேர்க்கும் கால்சியம் 50 மி.கி என அதிக அளவில் உள்ளது என்றும் கூறும் டாக்டர் கார்த்திகேயன், வேர்க்கடலையை அனைவரும் சாப்பிடலாம். ஆனால், அதிகம் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையை 50 கிராம் சாப்பிட்டால் போதும் என்று அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“