தினசரி காலையில் நம்மால் குடிக்க முடிந்த சூட்டில் ஒரு 200 மில்லி சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீரை உட்கொள்வது நமது உடல் செயல்பாடுகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதேபோல வெந்நீர் பல்வேறு வழிகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக மருத்துவர் கௌதமன் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
இதய நலன் மற்றும் இரத்த ஓட்டம்: வெந்நீர் இதயத் துடிப்பையும், இரத்த ஓட்டத்தையும் சீராக்க உதவுகிறது. இது நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
செரிமான மேம்பாடு: மிதமான சூட்டில் நீர் அருந்துவது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற செரிமான உபாதைகளைக் குறைத்து, மலச்சிக்கல் இல்லாத சீரான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
நச்சு நீக்கம் மற்றும் உடல் சுத்திகரிப்பு: வெந்நீர் குடிக்கும்போது, உடல் வெப்பநிலை உயர்ந்து, வியர்வை மூலம் நச்சுத்தன்மைகளை வெளியேற்றி, உடலைச் சுத்தப்படுத்துகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்ப்பது இந்தச் சுத்திகரிப்பு செயல்முறையை மேலும் மேம்படுத்தும்.
Advertisment
Advertisements
கல்லீரல் மற்றும் கொலஸ்ட்ரால்: கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க வெந்நீர் உதவுவதாகக் கூறப்படுகிறது.
சர்க்கரை கட்டுப்பாடு: கட்டுப்பாடற்ற சர்க்கரை பிரச்சனையை சீராக வைத்துக்கொள்ளவும், உடல் எடையைக் குறைக்கவும் வெந்நீர் பெரிதும் உதவுகிறது. தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க இது பயனுள்ளதாக இருக்கும். ஒரு துளி எலுமிச்சை சாற்றை வெந்நீருடன் சேர்ப்பது உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.
சருமம் மற்றும் முடி வளர்ச்சி: தொடர்ந்து வெந்நீர் குடிப்பது முகப்பருக்களைக் குறைத்து, சருமத்தைப் பொலிவாக்கும். மேலும், முடியின் வேர்களைச் சுறுசுறுப்பாக்கி, முடி வளர்ச்சிக்கும் துணை புரிகிறது.
மாதவிடாய் வலி நிவாரணம்: மாதவிடாய் நாட்களில் பெண்கள் மிதமான சூட்டில் நீர் அருந்துவது, மாதவிடாய் வலியைக் கணிசமாகக் குறைக்கும்.
நீண்ட ஆயுள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி: மிதமான வெந்நீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் விரைவாக வெளியேற்றப்பட்டு, வேகமாக வயதாவதைக் குறைக்கிறது. இது உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலுக்கு அத்தியாவசிய நன்மைகளைத் தருகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.