சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் சரி அதனுடன் சேர்த்து செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றை பற்றி மருத்துவர் ஷர்மிகா டெய்ஸி ஹாஸ்பிட்டல் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தங்கள் வீட்டில் வைத்தே சுமார் 5 நிமிடங்களில் இதற்கு தீர்வு காண முடியும். ஆவி பிடிப்பதன் மூலம் இதற்கு எளிமையாக தீர்வு காண முடியும் என டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு அதில் கற்பூரவல்லி இலைகளை சேர்த்து ஆவி பிடிக்கலாம். காது மற்றும் வாய் வழியாக ஆவி போகும்படி செய்தால். இந்த சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். நல்ல வேர்வை வர வேண்டும்.
அதேபோல ஆவி பிடித்து முடித்ததும் வியர்வையை துடைத்து விட்டு தலையை காயவைத்த பின் ஃபேன் காற்று வாங்கலாம். மாலை 4 மணிக்குள் ஆவி பிடித்து முடிக்க வேண்டும். மூக்கடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆவிபிடித்தல் மற்றொரு சிறந்த தீர்வு. அதீத சளிப் பிரச்னைக்கும் ஆவி பிடித்தல் தீர்வு கொடுக்கும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.