பச்சை முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா அதனால் உடலுக்கு என்ன மாற்றங்கள் ஏற்படும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தினமும் காலையில் பச்சை முட்டை குடிப்பது உடற்பயிற்சி செய்பவர்கள் உடலை வளர்ப்பதற்கு பச்சை முட்டை கொடுப்பது என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இது குறித்து நெதர்லாந்து ஆராய்ச்சி கூறுவது பற்றி பார்ப்போம். புரத உணவுகளை சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது குறைவாக உள்ளது.
பச்சை முட்டை சாப்பிடும் போது 51% தான் புரதம் ஜீரணம் ஆகிறது. அதற்கேற்ற அளவில் தான் நம் உணர்வுக்கு புரத மூலக்கூறுகள் கிடைக்கிறது. புரதம் என்பது வேக வைக்கப்பட்ட முட்டையில் தான் அதிகம் உள்ளது.
வேகவைக்கப்பட்ட முட்டையில் பல்வேறு விதமான வைட்டமின் கிடைக்கிறது மற்றும் இது நல்ல புரத மூலக்கூறு ஆகும். அதற்காக புரதம் தேவை என்றால் அதிக பச்ச முட்டை உடைத்து குடிக்க வேண்டிய அவசியம் இல்லை முட்டையை வேக வைத்து சாப்பிடலாம் என்று டாக்டர் சொல்கிறார்.
Advertisment
Advertisements
பிறகு குழந்தைகள் பச்சை முட்டையும் பாலும் குடிக்க கொடுப்போம். சிலருக்கு இது அலர்ஜி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். பச்சை முட்டையால் வயிற்று கோளாறுகளும் ஏற்படும். முட்டையை நன்கு வேகவைத்து சாப்பிட்டால் தான் கிருமி தொற்றுகள் இருக்காது.
பாலு முட்டையும் வேகவைத்து கொடுத்தால் எந்த பிரச்சனையும் இல்லை பச்சையாக கொடுக்கும்போது பிரச்சனை ஆகும். வேகவைத்த முட்டையில் கிடைக்கும் வைட்டமின் ஏ, ஒமேகா, வைட்டமின் பி போன்ற சத்துக்கள் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேக வைத்த முட்டைகள் கொடுக்கலாம் அதை தவிர காய்கறிகள் போன்ற மற்ற சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கலாம். பச்சை முட்டையை அப்படியே சாப்பிடுவதற்கு பத்திரமாக நான்கு பேக்க வைத்து சாப்பிடுவது நல்லது அதுவும் குழந்தைகளுக்கு ஆம்லெட் மாதிரி செய்து கொடுத்தால் மிகவும் நல்லது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.