Advertisment

காலையில் வெறும் வயிற்றில் 20 கிராம் கருப்பு எள்ளு... நம்ப முடியாத நன்மைகள் இருக்கு!

எள்ளில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ போன்ற சத்து உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் எள் சாப்பிடுவது பல நன்மைகள் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காலையில் வெறும் வயிற்றில் 20 கிராம் கருப்பு எள்ளு... நம்ப முடியாத நன்மைகள் இருக்கு!

sesame

ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எள்ளில் அதிக காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது. எள் சாப்பிடுவது எலுப்புக்கு வலு சேர்க்கிறது. ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. பல நம்மைகள் கொண்ட எள்ளை தினமும் ஏதே ஒரு வகையில் உட்கொள்வது சிறந்தது.

Advertisment

எள்ளில் கால்சியச் சத்து நிறைந்துள்ளதால் மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு பலத்தை கொடுக்கிறது. மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. மாதவிடாய் வந்து 15 நாட்களுக்கு பின் எள் சாப்பிட்டால் அடுத்த முறை மாதவிடாய்யின் போது இப்பிரச்சனைகள் இருக்காது.

எள்ளில் பைட்டோஸ்டெரால் என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது.

100 கிராம் எள் 573 கலோரி கொண்டுள்ளது. 100 கிராம் எள்ளில் 18 கிராம் புரதச்சத்து உள்ளது. இவை குழந்தையின் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment