டீ, காபி காலையில் குடிக்க கூடாது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அது சரியா தவறா? ஏன் குடிக்க கூடாது அப்படியே குடித்தால் ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும் என்று எஃப்.டி ஹெல்த் யூடியூப் பக்கத்தில் டாக்டர் தீபா அருளாளன் பேட்டி அளித்துள்ளது பற்றி பார்ப்போம்.
Advertisment
ஒரு நாளைக்கு எவ்வளவு டீ காபி குடிக்கலாம்? மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று பார்ப்போம்,
டீ காபியில் நிறைய நல்ல ஆரோக்கியமான பலன்கள் உள்ளது. டீ,காபியில் உள்ள கபைன் என்ற பொருள் உடலை மெதுமெதுவாக தெம்பாக்கும்.
கேரள பெண்கள் குடிக்கும் பிளாக் டீ, சரும அழகு மற்றும் முடி அழகிற்கும் உதவுவதாகவும் டாக்டர் கூறுகிறார்.
Advertisment
Advertisements
மன அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் காப்பி குடிக்கலாம் என்று ஆய்வுகளும் கூறுவதாக மருத்துவர் கூறுகிறார்.
உண்மையிலேயே டீ, காபி குடித்தால் நரைமுடி வருமா ?
ஒரு நாளைக்கு எவ்வளவு டீ,காபி குடிக்க வேண்டும் என்று அளவு உள்ளது. 200 மில்லி லிட்டர் குடித்தால் 5 காபி 100 மில்லி லிட்டர் குடித்தால் பத்து காபி ஒரு நாளைக்கு குடிக்கலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.
மேலும் இவற்றில் நிறைய பலன்களும் உள்ளது. பால் சேர்த்து குடிப்பதற்கு பதிலாக அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் குடிப்பது போன்று கருப்பு காபி, கட்டன்சாயா மாதிரி குடிக்கலாம்.
இது இன்னும் நிறைய பலன்களை நமக்கு கொடுக்கும் என்கிறார் மருத்துவர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.