சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் இயற்கை தந்த அருமையான பானம் இளநீர். இத்தகைய இளநீர் சக்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்பை குறைக்க உதவுமா என்பதையும், யார் இளநீர் குடிக்க கூடாது என்பதையும் இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநீரில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்துள்ளது. இளநீர் உடலுக்கு தேவையான நீர் சத்தைக் கொடுக்கிறது. நரம்பு மண்டலம், தசை மண்டல செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
இளநீர் பி.பி எனப்படும் ரத்தக் கொதிப்பை குறைக்க உதவுகிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. அல்சைமர், கீல் வாதம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.
இளநீரில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் மிக குறைவாக உள்ளது. இதனால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இருப்பினும் குறைவாக குடிக்க வேண்டும். வாரத்திற்கு 4 இளநீர் குடிப்பது மிகச் சிறந்தது. காலையில் வெறும் வயிற்றிலே இளநீர் குடிக்கலாம்.
அதேநேரம், தேங்காய் அழற்சி இருப்பவர்கள் குடிக்க கூடாது. கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். பி.பி-க்கு மாத்திரை சாப்பிடுவர்கள் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்த உராய்வு பிரச்சனை இருப்பவர்கள் குடிக்கக் கூடாது. இவ்வாறு டாக்டர் முரளி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“