இரண்டு ஈஸியான ஹெல்த்தி டிப்ஸ் பற்றி டாக்டர் ஷர்மிகா டெய்சி ஹாஸ்பிட்டல் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். முதல் ஒன்று துளசி, இரண்டாவது வாழைப்பழம்.
Advertisment
துளசி: துளசி செடி நம்ம வீட்ல வாங்கி வளர்ப்பது மிகவும் நல்லது. குயின் ஆப் ஹெர்ப்ஸ்ன்னு சொல்ற துளசி செடியை வீட்ல வாங்கி வளர்க்கனும். தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஆறு துளசி இலை எடுத்து கழுவி சுத்தம் செய்துட்ட் அப்படியே என்று சாறோடு சாப்பிட வேண்டும்.
இந்தக் துளசி பயங்கரமான சத்து நிறைந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் கொண்டது. கல்லீரல், தொண்டை மற்றும் சளி ஆகியவற்றிற்கு சிறந்தது.
தலைவலி, கண் பிரச்சனை உள்ளவர்களும் இதனை பயன்படுத்தலாம். மேலும் வாய் துர்நாற்றம் வீசும் போது இதனை சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
வாழைப்பழம்: வாழைப்பழம் தினமும் ஒன்றாவது எடுத்துக் கொள்ள வேண்டும். செவ்வாழை, தேன்வாழை, நேந்திரம், ஏலக்கி, கற்பூரம் என பலவகையான வாழைப்பழ வகைகள் உண்டு. அவற்றில் ஏதேனும் ஒரு பழத்தை தினமும் சாப்பிட வேண்டும்.
வாழைப்பழத்தை காயாக வாங்கி வீட்டில் பழுக்க வைத்து தினமும் காலையில் அல்லது மாலை வேளையில் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.