அதிகமானோர், காலை உணவை சரிவர எடுத்துக்கொள்வதில்லை, இது முற்றிலும் தவரான செயலாகும். அகவே, காலை உணவோடு சேர்த்து, வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது மூலம், அதிக நன்மைகளை பெறலாம். இது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.
வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. அவற்றுள் செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி, கோலிகூடு போன்ற வகைகளில் வாழைப்பழம் உள்ளது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து, தசை பிடிப்பை நீக்குகிறது. வாழைப்பழத்தில், மனித உடலில் சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் வலுப்படுத்த, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது.
கற்பூரவள்ளி வாழைப்பழம் எலும்புகளுக்கு நல்லது. இதில் மாங்கனீஷ், மெக்னிஷியம் எலும்புகளை பலப்படுத்த உதவும். இந்த பழம், தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது.
பச்சை வாழைப்பழம்: குளிர்ச்சியை கொடுக்கும்
ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீருக்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்
மஞ்சள் வழைப்பழம்: புரத சத்துக்கள் கொண்ட வழைப்பழத்தை நெஞ்சுக்கரிக்கும் போது சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“