கோடை காலத்தில் உடல் வறட்சி ஏற்படுவது பொதுவானது. இந்த வறட்சியைத் தவிர்க்கவும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறவும் வாட்டர் ஆப்பிள் எனப்படும் ரோஸ் ஆப்பிள் சிறந்த பழமாக இருக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். இது சுவையில் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் கலவை போல இருக்கும்.
Advertisment
வாட்டர் ஆப்பிள் இது அதிக நீர்ச்சத்து கொண்டது, எனவே கோடை காலத்தில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்கிறது.
இதில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் உள்ளன.
இது இரத்த சோகையைத் தடுக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேலும், இதில் செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன, அவை தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை.
எனவே, வாட்டர் ஆப்பிளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இது பரவலாக கிடைக்கக்கூடிய மற்றும் விலை குறைவான பழம். டாக்டர் கார்த்திகேயன் கூறுவது போல், கோடை காலத்தில் கிடைக்கும் இந்த பழத்தை உட்கொள்வது உடல் நலத்திற்கும் உடலை நீரேற்றமாக வைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.