இயற்கையான இன்சுலினாக செயல்படும்... இந்த காய் அடிக்கடி சாப்பிடுங்க; டாக்டர் கார்த்திகேயன்

பலரும் பார்த்ததும் ஒதுக்கும் பீர்க்கங்காயின் ஆச்சரியமான நன்மைகள் குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.

பலரும் பார்த்ததும் ஒதுக்கும் பீர்க்கங்காயின் ஆச்சரியமான நன்மைகள் குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
karthikeyan

பீர்க்கங்காய் ஒரு சாதாராண காய் போல் தோன்றினாலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் என டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவும் இந்த அற்புத காயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் நீரிழிவு நோயாளிகளுக்கு எப்படி உதவுகிறது என்றும் பார்க்கலாம். 

Advertisment

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: நீரிழிவு நோயாளிகளுக்கு பீர்க்கங்காய் ஒரு வரப்பிரசாதம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.

எடை குறைவு:  பீர்க்கங்காயில் கலோரிகள் மிகக் குறைவான அளவில் இருப்பதால், உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு. இதனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் அதிக கலோரிகள் சேராமல் தடுக்கலாம்.

செரிமான கோளாறு: பீர்க்கங்காயில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.

Advertisment
Advertisements

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: பீர்க்கங்காயில் வைட்டமின் சி மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

வீக்கத்தை குறைக்கும்: பீர்க்கங்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் பல்வேறு வகையான வீக்கங்களை குறைக்க உதவுகின்றன.

இரத்த சோகைக்கு நிவாரணம்: இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பீர்க்கங்காய் ஒரு நல்ல தேர்வு. இதில் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதால், இரத்த சோகை பிரச்சனையை குறைக்க உதவுகிறது மற்றும் உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.

சரும ஆரோக்கியம்: பீர்க்கங்காய் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இது தோல் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது மற்றும் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Vegetables to control insulin spike

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: